• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்

June 25, 2025 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேரம் – இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக முருகன் மில்ஸ் முதல் எருக்கம்பெனி வரை 1,140 மீட்டர் நீளத்திற்கு ₹56.90 கோடியில்
உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,எருக்கம்பெனி முதல் சிவானந்தா காலனி சந்திப்பு வரை கான்கிரீட் தூண்களின் மீது Girder Beam-கள் பொருத்தும் பணிகள் விரைவில் நடைபெற உள்ளது.இதன் காரணமாக 23.06.2025 முதல் 20.07.2025 வரை 28 நாட்களுக்கு மட்டும் இரவு 11.00 மணி முதல் காலை 05.00 மணிவரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வடகோவை வழியே கவுண்டம்பாளையம் செல்லும் வாகனங்கள் அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் – பாரதி பார்க் சாலை வழியே கணுவாய்- தடாகம் சாலை – இடையார்பாளையம் வழியே வந்து கவுண்டம்பாளையம் வந்து பிற இடங்களுக்கு செல்லலாம்.

அதைபோல் கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் நோக்கி செல்லும் வாகனங்கள் சங்கனூர் பாலம் அருகே உள்ள சங்கனூர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு அங்கிருந்து காந்திபுரம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க