• Download mobile app
07 Dec 2025, SundayEdition - 3588
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் நடப்பாண்டு ரூ.7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு

June 4, 2025 தண்டோரா குழு

கோவை சாய்பாபா காலனியில் என்.எஸ். ஆர்.சாலையில் புதுப்பிக்கப்பட்ட
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை திறப்பு விழா நடைபெற்றது.

இதனை ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சி.தங்கராஜ், ரெப்கோ வங்கியின் தலைவர் ஈ.சந்தானம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சி.தங்கராஜ், ரெப்கோ வங்கியின் தலைவர் ஈ.சந்தானம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,

ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ், 2000-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 25வது ஆண்டை கொண்டாட உள்ளது.13 மாநிலங்களில் 234 கிளைகளுடன் வீட்டுக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை சுமார் 5 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது.ரூ.14,500 கோடி வர்த்தகத்தில் உள்ளது.கோவையில் 24 கிளைகளில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கோவை மண்டலத்தில் மட்டும் 15,300 வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் வீடு என்ற இலக்குடன்,குறைந்த வட்டி விகிதத்தில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் வீட்டு கடன்களை வழங்கி வருகிறது.சாய்பாபா காலனி கிளையில் மட்டும் ரூ.173 கோடி வீட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது.அனைத்து ஆவணங்களும் உள்ளபட்சத்தில் 48 மணி நேரத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படும். ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.3 கோடி வரை கடன் கொடுக்கப்படுகிறது.

நிறுவனத்தின் 25வது ஆண்டு விழா ஆகஸ்ட் மாதம் சென்னையில் கொண்டாட உள்ளோம். சென்ற ஆண்டு 430 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளோம். நடப்பாண்டு ரூபாய் 500 கோடி லாபம் ஈட்டுவோம் என எதிர்பார்க்கிறோம்.இந்தாண்டு 13 மாநிலங்களிலும் உள்ள 234 கிளைகளிலும் ரூ.7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். தமிழகத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி வீட்டுக் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறோம் என்றார்.

பேட்டியின் போது ரெப்கோ வங்கியின் இயக்குனர் இன்னாசி,ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் கே.முரளிதரன்,மண்டல திட்ட மேலாளர் கே.சி சிஜூ, மண்டல மேலாளர் கே. சிபி, சாய்பாபா காலனி கிளை மேலாளர் எஸ் வில்லியம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க