• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ்

May 31, 2025 தண்டோரா குழு

தென்னிந்திய மக்களின் மனம் கவர்ந்த தங்கம் மற்றும் வைர நகை பிராண்டாக உள்ள பி.எம்.ஜெ. ஜூவல்ஸ், அதன் புது பி.எம்.ஜெ. சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை இன்று அதன் கோவை ஷோரூமில் அதன் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்தது.ஆண், பெண் என இருபாலரும் அணியும் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரேஸ்லட் வகை இன்று (31,5,25) முதல் குறுகிய காலத்திற்கு மட்டும் அனைத்து பி.எம்.ஜெ. ஜூவல்ஸ் ஷோரூம்களில் கிடைக்கும்.

இன்று கோவையில் நடைபெற்ற இதன் அறிமுக நிகழ்வில்,இத்துடன் இந்த நிறுவனத்தின் விளம்பர தூதர்களான தெலுங்கு உச்ச நட்சத்திரம் மகேஷ் பாபு மற்றும் அவர் மகள் சித்தாரா கட்டமனேனி இணைந்து நடித்துள்ள பி.எம்.ஜெ. ஜூவல்ஸ் நிறுவனத்தின் பி.எம்.ஜெ.வின் ஹாப் சாரி மற்றும் திருமண நகை கலெக்ஷன்களுக்கான ‘மகள்களை கொண்டாடுவோம்’ எனும் விளம்பரத்தின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது.

இதை பி.எம்.ஜெ. ஜூவல்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வெளியிட்டனர். இந்த விளம்பரம் தந்தைக்கும், மகள்களுக்கும் உள்ள பாசத்தை எடுத்து சொல்லும் வகையில் மிகவும் இயற்கையாக அமைந்துள்ளது.

இந்த பிரேஸ்லட் தங்கம் மற்றும் வைரத்துடன் சுவிட்சர்லாந்தில் இருந்து பெறப்பட்ட மிகச்சிறந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட ரப்பரை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒருபோதும் உடையாது. அதேசமயம் கையின் வடிவத்துக்கு ஏற்ப வளைந்துகொடுக்கும்.இதனால் இதன் வடிவம் பல வருடங்கள் ஆனாலும் மாறாமல் நீடித்துழைக்கும்.

இந்த பிரேஸ்லட் மற்றும் மகேஷ் பாபு நடித்துள்ள புது விளம்பரத்துடன் ஒரு புது பயணத்தை எதிர்நோக்கி பி.எம்.ஜெ. ஜூவல்ஸ் செல்கிறது. இதன் தனித்துவமான டிசைன்கள் மற்றும் நேர்த்தியான படைப்பு, நிச்சயமாக ஒவ்வொரு வாடிக்கையாளரின் குடும்பத்துடனும் இன்று என்றென்றும் தனியிடம் கொண்டதாக அமையும் என பி.எம்.ஜெ. ஜூவல்ஸ் கருதுகிறது.

மேலும் படிக்க