• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24 வது ஆண்டு பட்டமளிப்பு விழா

January 11, 2025 தண்டோரா குழு

டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24 வது ஆண்டு பட்டமளிப்பு விழா என்.ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது.டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் சா.சரவணன் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவேற்புரை வழங்கினார்.

பட்டமளிப்பு விதிப்படி கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் பட்டம் பெறவுள்ள மாணவர்களுக்கான உறுதிமொழியைக் கூறினார்.மாணவர்கள் அவ்வுறுதி மொழியைத் திரும்பக்கூறினர்.

இந்தநிகழ்வில் தமிழக அரசின் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் செயல் உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எஸ்.வின்சென்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

டாக்டர் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருந்துவர் நல்ல பழனிசாமி இந்நிகழ்விற்குத் தலைமையேற்றார். கோவை மருத்துவ மையத்தின் நிர்வாக அறங்காவலர் மருத்துவர் அருண் என்.பழனிசாமி இவ்விழாவில் கலந்து கொண்டார்.

டாக்டர் என்.ஜி.பி.கல்விக்குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கினார்.டாக்டர் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் ஓ.டி.புவனேஸ்வரன் பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி உரை வழங்கினார்.

டாக்டர் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் இணை செயல் அலுவலர் முனைவர் மா.நடேசன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.டாக்டர் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் இயக்குநர் பெ.இரா.முத்துசாமி,டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்விசார் இயக்குநர் கு.இராமமூர்த்தி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் இளங்கலை 1903,முதுகலை 390,முனைவர் பட்டம் 12 , மொத்தமாக 2305 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

மேலும் படிக்க