• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவிலான குவான் கிடோ போட்டியில் தங்கம் வென்று கோவை மாணவன் அசத்தல்

January 9, 2025 தண்டோரா குழு

தேசிய அளவிலான குவான் கிடோ போட்டியில் தங்க பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவன் திலகவர்ஷனுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை ரத்தினபுரி பகுதியை சார்ந்த நடைபாதை இளநீர் வியாபாரியான முருகன் மற்றும் முனீஸ்வரி தம்பதியரின் மகன் எம்.திலகவர்ஷன் கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான குவான்கிடோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவன் திலகவர்ஷனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

இந்நிலையில் அண்மையில் மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்ற 6 வது தேசிய அளவிலான குவான்கிடோ தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்ட திலகவர்ஷன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

மத்திய பிரதேசம் சென்று போட்டியில் கலந்து கொள்ள போதிய நிதி வசதி இல்லாத நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொருளாளர்,கோவை மத்திய மாவட்ட தலைவர் மற்றும் தொழிலாளர் நலத்துறையின் கண்காணிப்பு குழு உறுப்பினருமான குருஸ் முத்து பிரின்ஸ் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் V.P.S. சௌந்தரபாண்டி ஆகியோர் இணைந்து திலக வர்ஷனுக்கு அனைத்து விதமான ஊக்கம் மற்றும் உதவிகள் செய்து தேசிய அளவிலான இந்த போட்டியில் கலந்து கொள்ள செய்தனர்.

தற்போது திலகவர்ஷன் இப் போட்டியில் தங்கம் வென்று இருப்பது அப்பகுதியினர் இடையே மிகுந்த பெருமையை ஏற்படுத்தி இருக்கிறது.இதனை தொடர்ந்து, தங்கபதக்கம் வென்று கோவை திரும்பிய திலக வர்ஷனுக்கு அப்பகுதி மக்கள் சார்பாக மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் குரூஸ் முத்து பிரின்ஸ், சௌந்தரபாண்டி,மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய மாணவன் திலக் வர்ஷன் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள செல்ல தமக்கு உதவிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் படிக்க