• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் கோவையில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது

January 2, 2025 தண்டோரா குழு

பெங்களூருவை தளமாகக் கொண்ட மின்னணு வாகனம் உற்பத்தி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரிவர், தமிழகத்தில் தனது இரண்டாது கடையைத் கோயம்புத்தூரில் தொடங்கியது.

இண்டீ ஸ்கூட்டர்கள், ஆக்செஸ்சரீஸ் மற்றும் அதைச்சார்ந்த வணிகப் பொருட்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்களுக்கு அழகாக காட்சிப்படுத்தும் வகையில் ரிவர் ஸ்டோர் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த இண்டீ ஸ்கூட்டர்கள் கோயம்புத்தூரில் உள்ள புதிய ரிவர் ஸ்டோரில் உடனடியாக விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,42,999-ஆக (எக்ஸ்-ஷோரூம், கோயம்புத்தூர்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை ராமநாதபுர த்தில் 1200 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கடை, ராஜ்துரை இ-மொபிலிட்டி எல்எல்பி நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டில், சென்னையில் தனது முதல் கடையைத் தொடங்கியதன் மூலம் ரிவர் தமிழகத்தில் தடம் பதித்தது.

கோயம்புத்தூரைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் விரைவான விரிவாக்கத்தைக் குறிக்கும் வகையில் வேலூர், ஈரோடு மற்றும் திருப்பூரில் கடைகளைத் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரிவர் தற்போது பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, ஹூப்ளி, விசாகப்பட்டினம் மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் மொத்தம் 09 விற்பனை நிலையங்களை கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் அடுத்த சில மாதங்களில் மைசூர், பெல்காம், திருப்பதி, அகமதாபாத், புனே, நாக்பூர் மற்றும் டெல்லி ஆகிய இடங்களுக்கு தனது தடத்தை விரிவுபடுத்தும்.

கடையின் துவக்கம் குறித்து பேசிய இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அரவிந்த் மணி,

“சென்னையில் எங்கள் முதன்மை கடையின் வெற்றிக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.ஆரம்பத்தில் இருந்தே எங்களுடன் பணியாற்றும் ஊழியர்கள் பலர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது எங்களுக்கு ஒரு சிறப்புச் சந்தை. ஸ்டைலையும், வசதியையும் ஒன்றாக வழங்கும் ரிவர் இண்டியை இப்பகுதியில் ஒரு தனித்துவமான வாகனமாக நிறுவுவதே எங்கள் குறிக்கோளாகும். 2025 மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 25 ரிவர் கடைகளைத் திறப்பதே எங்கள் திட்டம்”, என்றார்.

கோயம்புத்தூர் ரிவர் ஸ்டோர் ஒரு துடிப்பான சூழலைக் கொண்டுள்ளது மற்றும் ஓட்டக் கோடுகள், கூழாங்கற்கள் மற்றும் ஆறுகளின் சாரத்தை தூண்டும் பிற கரிம வடிவங்களை உள்ளடக்கிய பிராண்டின் அழகியலை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடையின் அழகியலின் மையத்தில் கவனமாக வடிவமைக்கப்பட்ட வாழ்விடங்கள் உள்ளன. அன்றாட வாழ்க்கையில் இண்டீ எவ்வாறு கலக்கிறது என்பதை முதல் வாழ்விடம் சித்தரிக்கிறது. கோயம்புத்தூரின் உள்ளூர் நகர நிலப்பரப்பில் உள்ள இண்டியை அடுக்கு விளக்கப்படங்களுடன் சித்தரிக்கிறது இரண்டாவது வாழ்விடம். மக்களை அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து அவர்கள் இருக்க விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்லும் இக்கதைகள் ரிவர்-ன் நெறிமுறைகளுடன் ஒத்துப்போகின்றன.

கோயம்புத்தூர் ரிவர் ஸ்டோர், எண். 41,42 கோத்தாரி லேஅவுட், ராமநாதபுரம் , கோயம்புத்தூர்-641005 –இல் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் கடைக்குச் சென்று டெஸ்ட் ட்ரைவ் செய்யலாம், வணிகப் பொருட்களை உலாவலாம் அல்லது புதிய இண்டீ-யை வாங்கலாம். வாடிக்கையாளர்கள் டெஸ்ட் ட்ரைவ்-க்கு முன்பதிவு செய்யவும், ஒரு புதிய இண்டீ-யை வாங்கவும் www.rideriver.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

மேலும் படிக்க