கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் வசிக்கும் அறிவழகன் (40) என்பவர் டேக்ஸி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 21.12.2024 அன்று அறிவழகன் ராமகிருஷ்ணா மில்ஸ் அருகில் வாடகைக்காக காத்திருந்த போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் தான் ஊட்டிக்கு போக வேண்டும் எனக்கூறி அறிவழகன் காரில் ஏறி காரமடை வழியாக மருதூர் காலேஜ் புரம் அருகே நிறுத்த சொன்னதாகவும் அறிவழகன் அப்பகுதியில் காரினை நிறுத்திவிட்டு சுமார் 4 மணி நேரமாக காத்திருந்துள்ளார்.
பின்னர் மாலை சுமார் 7 மணி அளவில் அறிவழகன் டிரைவர் சீட்டிற்கு உட்கார சென்றபோது பின்னால் நின்று கொண்டிருந்த அந்த நபர் திடீரென்று அறிவழகன் கழுத்தில் கத்தியை வைத்து கீறியதாகவும்,அவர் சுதாரித்துக் கொண்டு தடுத்துள்ளார்.பின்னர் அறிவழகனை கீழே தள்ளிவிட்டு சுமார் ரூபாய் 9,50,000/- மதிப்புள்ள அறிவழகன் காரை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் காரமடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழிப்பறி வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வந்த நிலையில் இன்று (22.12.2024) மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் மகன் தனுஷ் (20) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் மேற்படி நபரை கைது செய்து மேற்படி வழக்கின் சொத்தான காரை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு