கோவை ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை சார்பில் 14 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் 2025- 2027ஆம் ஆண்டின் புதிய தலைவராக வழக்கறிஞர் பி. சாத்துகுட்டி, துணைத் தலைவர் சைலஜா வேணு செயலாளர் ஸ்ரீ ஹரி, துணை செயலாளர் கே.ஏ பங்கஜ் குமார், பொருளாளர் பி.வி சஜிஷ்குமார் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.
ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை கோவை பாலக்காடு சாலையில் 1984 ஆம் ஆண்டு ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரியையும்,1994 ஆம் ஆண்டு ஸ்ரீ நாராயண குரு கல்லூரியையும் துவங்கியது.பாலிடெக்னிக் கல்லூரி தமிழகத்தில் நம்பர் ஒன் கல்லூரியாகவும் பெயர் பெற்றது.நாங்கள் ஒழுக்கத்தை மாணவர்களுக்கு முதலில் கற்றுக் கொடுக்கின்றோம்.எங்களது கல்லூரியில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் அனைத்து துறைகளிலும் மாணவர்களை ஊக்குவித்து வருகின்றோம்.
மேலும் மாணவர்களுக்கு சிறந்த நூலகம், கேண்டின் வசதி,ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனி விடுதிகள், பேருந்து வசதிகள் என அனைத்து வசதிகளும் உள்ளது. சிறந்த உடற்கல்வி ஆசிரியர் மூலம் கால்பந்து அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெற்று பல்வேறு கோப்பைகளை வென்றுள்ளது.
விளையாட்டுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். தற்போது அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு ஏ.ஐ கோர்ஸ் பாடத்திட்டம் எங்களது கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் லேட்டஸ்ட் கம்ப்யூட்டர், எக்யூப்மென்ட்ஸ், அனைத்து டிவைஸ்களுடன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
எங்களது அடுத்து இலக்கு எம்.பி.ஏ கோர்ஸ் பாடத்திட்டம் கொண்டுவர முடிவெடுத்துள்ளோம்.எங்களது கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்த பதவிகளில் உள்ளனர்.குறிப்பாக, ஏழை மாணவர்களுக்கென தனி ஒதுக்கீடு வழங்கி மதிப்பெண் அடிப்படையில் ஸ்காலர்ஷிப் வழங்கி வருகின்றோம் என தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு