கோவை குருடாம்பாளையத்தில் தூய்மைப்பணியாளராக பானியாற்றி வருபவர் மதன்குமார்.இவரது மகள் மெளசிகா தொப்பம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
கடந்த 17 ஆம் தேதி மெளசிகா தனது தாத்தா,பாட்டியை பார்ப்பதற்காக, அவர்கள் பணிபுரியும் விளாங்குறிச்சி- காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு சென்றுள்ளார்.அங்கு பணி செய்துகொண்டிருந்த தாத்தா, பாட்டியை பார்த்துவிட்டு மணமகள் அறையில் இரு பைகள் இருப்பதை பார்த்துள்ளார்.அதில், தங்க நகை மற்றும் பணம் இருந்துள்ளது. உடனடியாக இரு பைகளையும் மண்டப மேலாளர் மகாலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.
அன்றைய தினம் இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத்தலைவர் ஆர் கே குமாரின் மகள் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் நகையை மறந்து வைத்துவிட்டு போயுள்ளது தெரிய வந்ததை அடுத்து,மேலாளர் உரியவரிடம் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை ஒப்படைத்தார்.
நகை மற்றும் பணத்தை மீட்டுக்கொடுத்த மாணவியை அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவரும், பெண்ணின் தந்தை ஆர்.கே.குமார்,மாநில மகளிரணி தலைவி லதா அர்ஜூன்,மாவட்ட தலைவர் ரமேஷ்குமார்,மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார்,மகளிரணி மாவட்ட துணை தலைவி கார்த்திக் ரமேஷ்குமார், செயற்குழு உறுப்பினர் ராமஜெயம்,ஐடி விங் மாநில தலைவர் ஜெயபிரகாஷ்,திருமண மண்டப உரிமையாளர் டாக்டர் மகேந்திரன்,மேலாளர் மகாலிங்கம் ஆகியோர் சால்வை அணிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
பள்ளி மாணவியின் தந்தை மதன் குமார்,தாய் மஞ்சுளா மற்றும் குடும்பத்தார் உடன் உள்ளனர்.
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை
கோவையில் சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025 துவக்கம்
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்