• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் துருப்பிடித்த மின்விளக்கு கம்பம் விழுந்து தினக்கூலி பெண்மணி படுகாயம் – நடவடிக்கை கோரி மனு

November 12, 2024 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 68 காந்திநகர் பகுதியில் கடந்த நவம்பர் 7ம் தேதி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்கு கம்பம் துருப்பிடித்து விழும் நிலையில் இருக்கிறது.என்று அப்பகுதி மக்கள் கவுன்சிலரிடம் புகார் தெரிவித்தும் அதனை அகற்றாமல் இருந்தனர்.

இந்நிலையில்,கடந்த நவம்பர் 7ம் தேதி மாலை சுமார் ஆறு மணி அளவில் அப்பகுதியில் வசிக்கும் பூர்ணிமா என்கிற தினக்கூலி பெண்ணின் தலையில் விழுந்து அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தலையில் 11 தையல்கள் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தகவலறிந்த தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டடத் தொழிலாளர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் மத்திய சங்கத்தின் கோவை மத்திய மாவட்ட தலைவர் குருஸ் முத்து பிரின்ஸ், மற்றும் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் சௌந்தரபாண்டியன் மற்றும் இரு கட்சியினரும் இணைந்து இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் சிகிச்சையில் இருந்து வரும் பூர்ணிமா அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு அப்பகுதியை ஆய்வு செய்தனர்.

அப்போது, மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 68 காந்திநகர் பகுதி மிகவும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக, இதுகுறித்து சம்பந்தப்பட்ட வார்டின் சுகாதார ஆய்வாளர் சரவணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக அந்த பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிடுவதாக சுகாதார ஆய்வாளர் உறுதியளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் வேண்டி இன்று கோயம்புத்தூர் மாநகராட்சியின் துணை மேயர் வெற்றிச்செல்வன் அவர்களை விவசாய தொழிலாளர்கள் கட்சியினர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.அதனை உடனடியாக பரிசீலனை செய்த துணை மேயர் வெற்றிச்செல்வன் இந்த சம்பவம் குறித்து தகுந்த விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் குரூஸ் முத்து பிரிண்ஸ் கூறுகையில்,

இப்பகுதியில் வசித்து வரும் தினக்கூலி பெண்மணியான பூர்ணிமாவுக்கு நியாயம் கிடைத்திடவும்,தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மூலம் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அந்த பெண்மணிக்கு நிதி இழப்பீடு வழங்கிய தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க