• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு தலைவர் தலைமையில் சமத்துவ தீபாவளி கொண்டாட்டம்

October 29, 2024 தண்டோரா குழு

கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு சார்பில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் வழிகாட்டுதல் படியும், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அறிவுறுத்தல் படி சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் தலைமையில் சமத்துவ தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.

இந்த சமத்துவ தீபாவளி விழாவில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஜாதி மத பேதமின்றி பொதுமக்களுக்கு புத்தாடை,இனிப்புகள் மற்றும் தீபாவளி போனஸ் போன்றவற்றை கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு தலைவர் வழங்கினார்.
இதை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் முதலமைச்சர்,துணை முதல்வர்,மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆகியோருக்கு தங்களது தீபாவளி வாழ்த்துகளையும்,நன்றிகளையும் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் கூறுகையில்,

திமுகவின் தாரக மந்திரமே ஒன்றே குலம் ஒருவனை தேவன்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என அறிஞர் அண்ணா,தலைவர் கலைஞர் ஆகியோர் வழிகாட்டுதல் பாடி சமூகநீதி, சமத்துவத்தை நிலைநாட்டிட தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அரும்பாடு பட்டு வருகின்றனர். ஆகவே அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தீபாவளி திருநாளில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு புத்தாடை,இனிப்பு மற்றும் தீபாவளி போனஸ் என மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் வழிகாட்டுதல் படி வழங்கி உள்ளேன் என கூறினார்.

மேலும் படிக்க