• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்ருதா விஸ்வ வித்யாபீடம் கோயம்புத்தூர் வளாகத்தில் 5-வது ஜூனியர் மற்றும் 10-வது சீனியர் பாரா ஸ்விம்மிங் சாம்பியன்ஷிப் 2024

October 19, 2024 தண்டோரா குழு

அம்ருதா விஸ்வ வித்யாபீடம், தமிழ்நாடு பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் கோயம்புத்தூர் பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆகியவற்றுடன் இணைந்து, 5-வது ஜூனியர் மற்றும் 10-வது சீனியர் பாரா ஸ்விம்மிங் சாம்பியன்ஷிப் 2024-ஐ அதன் கோவை வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தியது.

இந்நிகழ்வில் 16 பிரிவுகளில்,சுமார் 90 ஆண் மற்றும் 35 பெண் நீச்சல் வீரர்கள் உட்பட 125 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், துவக்கி வைத்து சிறப்பித்தார். இதில் வெற்றி பெற்றவர்கள் நவம்பர் 10, 2024 அன்று கோவாவில் நடைபெறவிருக்கும் தேசிய சாம்பியன்ஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் (பிசிஐ) துணைத் தலைவர் ஆர்.சந்திரசேகர், TNPSA-வின் பொதுச்செயலாளர் கிருபாகர இராஜா, CPSA அமைப்பின் செயலாளர் ஷர்மிளா இராமானந்த் மற்றும் அம்ருதா விஸ்வ வித்யாபீடம்,கோயம்புத்தூர் வளாகத்தின் இயக்குநர் எஸ்.ஆர்.மேனன் (ஓய்வு) பரிசு வழங்கும் நிகழ்வை நடத்தி வைத்து சிறப்பித்தனர்.

அம்ருதா விஸ்வ வித்யாபீடம் கோயம்புத்தூர் வளாகம்,மாவட்ட அளவில் ஒலிம்பிக்-தரமான நீச்சல் குளத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.இதன் மூலம் அத்தகைய உயர்தர பாரா-விளையாட்டு நிகழ்வை நடத்துவதற்கான சிறந்த வளாகமாக அம்ருதா பல்கலைக்கழகம் அமைகிறது.

மேலும் படிக்க