புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகள் இந்தியாவின் முதன்மை நிறுவனமாகவும் மற்றும் டாடா பவரின் துணை நிறுவனமாகவும் இயங்கி வரும் டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி லிமிடெட், அதன் பிரபலமான ‘வீட்டுக்கு வீடு சோலார் , டாடா பவர் கீ சங்’ என்ற முன்னெடுப்பு திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்படுவதன் மூலம் விரிவாக்கம் செய்யப்படுவதை அறிவித்துள்ளது.
ராஜஸ்தான்,உத்தரப் பிரதேசம்,கேரளா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இதன் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து,இந்த முன்னெடுப்பானது இப்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு நிலையான மற்றும் எளிதாக கிடைக்கும் சூரிய ஆற்றலின் மூலம் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,இதன் மூலம் தூய்மையான ஆற்றல் தீர்வுகளை தமிழ்நாட்டு மக்கள் பெறுவதற்கு இது உதவுகிறது.
கோவையில் நடைபெற்ற இந்த தொடக்க விழா நிகழ்வில்,டாடா பவர் கம்பெனி லிமிடெட்டின் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர்.பிரவீர் சின்ஹா,மற்றும் டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி லிமிடெட்-இன் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் தீபேஷ் நந்தா மற்றும் மூத்த உயரதிகாரிகள் மற்றும் கூட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூய்மையான ஆற்றலுக்கு எளிதாக மாறுவதற்காக மாநிலம் முழுவதிலும் 42 சேனல் பார்ட்னர்களின் ஆதரவோடு இந்த திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.
டாடா பவர் கம்பெனி லிமிடெட்டின் தலைமை செயல் அலுவலர் & நிர்வாக இயக்குநர் டாக்டர்.பிரவீர் சின்ஹா இது குறித்து கூறியதாவது:
”தமிழ்நாட்டில் எங்களது வீட்டுக்கு வீடு சோலார் முன்னெடுப்பு திட்டத்தின் அறிமுகமானது இல்லங்களில் மேற்கூரைகளில் நிறுவப்படும் சோலார் தீர்வுகளின் வழியாக தூய்மையான மற்றும் வலுவான மின்சக்தி தயாரிக்கப்படுவதிலும், பயன்படுத்தப்படுவதிலும் ஆதரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மேற்கூரைகளில் நிறுவப்படும் சோலார் சாதனங்களின் வழியாக தங்களது மின்சார பயன்பாட்டிற்காக செலவிடப்படும் தொகைகளை பெரிதும் குறைக்க முடியும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மக்கள் பரவலாக பயன்படுத்துவதை மாநில அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.பிரதம மந்திரி சூர்ய கர் யோஜனா திட்டத்தின் வழியாக, 1 கிலோ வாட் சோலார் சாதனத்திற்கு ரூபாய்.30,000,2 கிலோ வாட் க்கு ரூபாய்.60,000 மற்றும் 3 முதல் 10 கிலோ வாட் வரையிலான சோலார் சாதனங்களை நிறுவுவதற்கு ரூபாய்.78,000 என அரசு வழங்கும் மானியத்தொகை மூலம் குடியிருப்பாளர்கள் பயனடையலாம். அரசு வழங்கும் இந்த ஊக்கத்தொகைகள், சூரிய மின்சக்திக்கு மாறுவதற்கான செலவை வெகுவாகக் குறைக்கின்றன, இதனால் வீட்டு உரிமையாளர்கள் தூய்மையான ஆற்றலான சூரிய ஒளி மின் சக்தியை தாங்களே தயாரித்து சிறப்பாக பயன்படுத்த முடியும்.
சோலார் சாதனங்களை வீட்டு மேற்கூரைகளில் நிறுவுவதற்காக அரசால் வழங்கப்படும் இந்த மானியத் தொகைகளுக்கும் கூடுதலாக, நிகர மின்சக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அளவிடுவதற்கான மீட்டர்களும் இத்திட்டத்தில் பொருத்தப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் மின்சார உற்பத்திக்கு கிரெடிட்களை பெற்று பயனடையலாம். இந்த கிரெடிட்களை எதிர்கால மின்சார பில்களின் தொகையிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இதன் மூலம் மாதாந்திர மின்கட்டண செலவுகளை குறைக்கலாம் மற்றும் சோலார் சாதனங்கள் மீது செய்யப்பட்ட முதலீடுகளிலிருந்து கிடைக்கும் சேமிப்பை அதிகரிக்கலாம்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு