• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“தேசிய கீதத்திற்கு மாற்றுத் திறனாளிகள் எழுந்திருப்பது கட்டாயமல்ல”

January 25, 2017 தண்டோரா குழு

“நாடு முழுவதும் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கும் போது மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்கவேண்டிய கட்டாயமில்லை” என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சி தொடங்கும் முன் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் டிசம்பர் 1-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

“நாடு முழுவதும் திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சி தொடங்கும் முன்பும் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும். அப்போது, பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். தேசிய கீதம் இசைக்கப்படும்போது, திரையில் தேசியக் கொடியைக் காட்ட வேண்டும்“ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கும் போது மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்பதில் சிரமம் உள்ளது என்ற காரணத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வழிமுறைகளை வகுத்திட வேண்டும் என மத்திய அரசிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்து மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கும் போது மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்க வேண்டிய கட்டாயமில்லை. ஆனால், தேசிய கீதம் இசைக்கும் போது, அவர்கள் சைகைகள் எதுவும் செய்யக்கூடாது. அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும். திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கும் முன் கண்டிப்பாகத் திரையில் அறிவிப்பு செய்ய வேண்டும். தேசிய கீதம் இசைக்கும்போது பார்வைக் குறைபாடு மட்டும் உள்ளவர்கள் முடிந்தால் எழுந்து நிற்கலாம்“ என்று குறிப்பிட்டுள்ளது

மேலும் படிக்க