• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கிரீஸ் டொயோட்டா புதிய ஷோரூம் திறப்பு

October 12, 2024 தண்டோரா குழு

கோவையில் புதிய டொயோட்டா கார்கள் வாங்க,சர்வீஸ் செய்ய மற்றும் கார் டீடெய்லிங் என அனைத்து வசதிகளும் ஒரே கூரையின் கீழ் பிரம்மாண்டமாக கிரிஷ் டொயோட்டா தனது ஷோரூமை
தொடங்கியுள்ளது.

கரூரை சேர்ந்த கே.ஆர்.குழுமம் சார்பாக துவங்கப்பட்டுள்ள இதற்கான துவக்க விழா கே.ஆர்.குழுமத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.விழாவில் அவரது தாயார் லட்சுமி அம்மாள் புதிய ஷோரூமை திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் .கே.ஆர்.குழுமத்தின் தலைவர் ராமகிருஷ்ணன், கிரிஷ் டொயோட்டாவின் நிர்வாக இயக்குனர் வசுதா ராமகிருஷ்ணன் மற்றும் தலைமை செயல் அதிகாரி பிரகாஷ் ஆகியோர் கூறியதாவது:-

ஏற்கனவே கோவையில் டொயோட்டா ஷோரூம்கள் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் நலன் கருதி டொயோட்டா எங்கள் நிறுவனத்திற்கும் வாய்ப்பு வழங்கி உள்ளது.மேலும்
இங்கு டொயோட்டா ஆரம்ப மாடல் துவங்கி உயர் ரக சொகுசு வகை கார்கள் வரை விற்பனை செய்யப்படும்.கார் டீடெய்லிங்,நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட சர்வீஸ் மையம் என அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளது.

பல்வேறு துறைகளில் எங்களது கே.ஆர்.குழுமம் ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்த தலைமுறை பயணமாக வாகனம் தொடர்பான துறையை தேர்வு செய்யப்பட்டுள்ளது.அடுத்தடுத்து புதிய
ஷோரூம்களை விரைவில் திறக்க உள்ளோம்.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்

மேலும் படிக்க