• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும்

January 25, 2017 தண்டோரா குழு

இந்தியாவில் கூடுதல் நிதி ஆதாரங்களோடு நாடாளுமன்றத்திற்கும், சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி கூறியுள்ளார்.

புது தில்லியில் 7-வது வாக்காளர்கள் தினத்தையொட்டி கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று அவர் பேசியதாவது;

“இந்தியாவில் இனி வரும் காலங்களில் கூடுதல் நிதி ஆதாரங்களோடு நாடாளுமன்றத்திற்கும், மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும். ஆனால், அதற்கு இரண்டு முக்கிய நிபந்தனைகள் உள்ளன.

முதலாவதாக அனைத்து அரசியல் கட்சிகளிடம் அரசியல் கருத்தொற்றுமை ஏற்படுத்தி தேர்தலுக்கு ஏற்றவாறு சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அடுத்து, மின்னணு வாக்கு எந்திரங்கள் அதிக அளவு வாங்குவதற்குக் கூடுதல் நிதி தேவை.

இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தின் கருத்துகள் மத்திய சட்ட அமைச்சகத்திற்கும், நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கும், சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சுமார் ரூ.9,000 கோடி தேவைப்படும்”
இவ்வாறு நஸீம் ஜைதி பேசினார்.

மேலும் படிக்க