அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் தேறி விரைவில் அமைச்சராகி மக்கள் பணியாற்ற வேண்டும் என வேண்டி கோவை அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் திமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்.
ஒன்றை ஆண்டுகள் சிறைவாசித்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதைஅடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக வேண்டுமென்றும் மீண்டும் அமைச்சராகி மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் வேண்டி கோவை அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் திமுக மாணவர் அணி முன்னாள் அமைப்பாளரும் தண்டு மாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினருமான மனோஜ் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் தினேஷ்,பாலாஜி விக்னேஷ் உட்பட திமுகவினர் தங்க தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்.
திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பலரும் பங்கேற்றனர்.ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் விடுதலையாக வேண்டும் என தண்டு மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்திருந்ததாகவும் அந்த வேண்டுதல் தற்போது நிறைவேறி உள்ளதால் தங்க தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு