• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹிதாயா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி மாணவிகள் நடத்தும் ஹிஜ்ரத் கண்காட்சி

August 2, 2024 தண்டோரா குழு

இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வான ஹிஜ்ரத் குறித்தும், அந்நிகழ்வு நமது வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்தும் மாடல்கள் மூலம் எளிமையாக விளக்கிட ஹிதாயா இஸ்லாமியக் கல்லூரி மாணவிகள் கண்காட்சி நடத்துகின்றனர்.

இக்கண்காட்சி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 1, 2 ஆகிய இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்காகவும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி பெண்களுக்காகவும் நடைபெறுகிறது.

இக்கண்காட்சியின் துவக்க விழாவுகு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர் P.S. உமர் ஃபாரூக் தலைமை வகித்தார்.ஹிதாயா கல்லூரி முதல்வர் ஆலிமா. ஜீனத்தில் பௌஸ் MA., வரவேற்றார்.

தொடர்ந்து கண்காட்சியை மதுக்கரை முஸ்லிம் காலணி பள்ளிவாசல் தலைவர் M. ஷௌக்கத் அலி திறந்து வைத்தார்கள். தொடர்ந்து லைஃப்ஜோன் கிளினிக் தலைமை மருத்துவர் Dr.பாத்திமுத்து நூரானியா,அரஃபா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஹாசிம் சாஹிப்,அஸ்ரப் சாஹிப், இன்ஜினியர் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் அரங்குகளை திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர பெண்கள் அணி செயலாளர் ஜஹீனா, ஜமாஅத் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து கல்லூரி மாணவிகள் ஹிஜ்ரத் கண்காட்சியை அழகுற எடுத்துரைத்தார்கள். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கண்காட்சிக்கு வருகை தந்து கண்காட்சியைப் பார்த்து பயன்பெற்றார்கள்.

மேலும் படிக்க