• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இட ஓதுக்கீடு செல்லும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழ் புலிகள் வரவேற்பு

August 2, 2024 தண்டோரா குழு

அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீதஉள்ளிட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தமிழ் புலிகள் கட்சி வரவேற்கிறது.

இது குறித்து தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் பொதுச் செயலாளர் இளவேனில் நிர்வாகிகள் தம்பி செந்தில் சந்திரன் ஆகியோர் கூறியதாவது:-

2009 ஆம் ஆண்டு டாக்டர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு வழங்கிய 3% உள்இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எந்த தடையுமில்லை.என்று உச்ச நீதிமன்றம்வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது.இந்த வழக்கில் தமிழ்ப்புலிகள் கட்சி தன்னையும் இணைத்துக் கொண்டு வழக்கறிஞர்களை நியமித்து வழக்காடினோம்.

அதன்படி இந்த உள் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு வலு சோக்கும் விதமாக துணை நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சட்ட மன்றத்தில் தொடாந்து குரல் கொடுத்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹீருல்லா அவர்களுக்கும்.இந்த வழக்கில் சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம்,திராவிடர்கழகம் மற்றும் அனைத்து ஜனநாயக தோழமை சக்திகளுக்கும் தமிழ்ப்புலிகள் கட்சி தனது நன்றியை தெரிவித்துக்
கொள்கிறது.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் படிக்க