• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம் 324C சார்பாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்

July 28, 2024 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் உள்ள தெக்கல்தானில் லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம் 324C சார்பாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் இன்று நடைபெற்றது.இப்பேரணியானது
வி.கேர் சிஸ்டம் மற்றும் லயன்ஸ் ரீஜன் சேர்பர்சன் T.வெங்கடகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இது குறித்து, லயன்ஸ் ரீஜன் சேர்பர்சன் T.வெங்கடகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம் 324C சார்பாக இந்த வருடம் எங்களுடைய கவர்னரின் கனவு திட்டமான Mammo for mom என்ற மார்பக புற்றுநோய் கண்டறியும் விழுப்புணர்வு பேருந்தை பொது மக்களுக்கு இலவசமாக தரவுள்ளதாக தெரிவித்தார். அதிகமான பொதுமக்களுக்கு மார்பக புற்று நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்,அதற்காக லயன்ஸ் மாவட்டம் சார்பாக பொது மக்களுக்கு இலவச பேருந்து தர உள்ளதாகவும் அதில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக சிகிச்சை பெறலாம் என்றார்.

மேலும் இதற்கான மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தெக்கலத்தானில் நடைப்பெற்றது.இந்த மாரத்தானில் ஒரு லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வெற்றி பெற்றவர்களுக்கு கொடுத்துள்ளதாகவும் இதில், 5 வயது முதல் 10 வயது வரை தனி தனியாக பரிசுகளும், அதேபோல் 11,15 வயது வரை உள்ள ஆண்,பெண் பள்ளி மாண,
மாணவிகளுக்கு மற்றும் 15 வயதுக்கு மேல் ஓபன் கேட்டகிரி பிரிவில் ஆண்,பெண் என இருபாலர் பிரிவில் போட்டிகள் நடைபெற்றது.

Mஇதில் 60 வயதிற்கு மேல் உள்ள சீனியருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மொத்தம் ஆறு பிரிவில் 1.கிலோமீட்டர் முதல் 5. கிலோ மீட்டர் என குழந்தைகளுக்கு ஒரு கிலோமீட்டர் தூரமும், பெரியவர்களுக்கு 5 கிலோமீட்டர் தூரம் என மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இம்மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு bed, இரண்டாம் பரிசு கிரைண்டர், மிக்ஸி மற்றும் அயன்பாக்ஸ் என வீட்டிற்கு தேவையான பொருட்களை கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதில் மாவட்ட ஆளுநர் Dr.நித்யானந்தம், முதல் துணை மாவட்ட ஆளுநர் ராஜசேகர், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் செல்வராஜ், GAT ஒருங்கிணைப்பாளர் சூரி நந்தகோபால், ஜோன் சேர் person dr.ராமலிங்கம், ஜோன் சேர்மேன்கள் பால்ராஜ், சந்திரசேகர், கர்ணன், GMT முத்துவேல், கேன்சர் district சேர் பர்சன் மோகனாராம்குமார், முன்னாள் மாவட்ட ஆளுநர் ராம்குமார் மற்றும் V3 ஈவண்ட் விவேகாயோகராஜ் மற்றும் குழுவினர்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க