• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக சிலம்ப விளையாட்டு சங்கம் மற்றும் Freak fitness அண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி

June 11, 2024 தண்டோரா குழு

உலக சிலம்ப விளையாட்டு சங்கம் மற்றும் Freak fitness அண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது.

கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள Sns தொழில்நுட்பக் கல்லூரியில் உலக சிலம்ப விளையாட்டு சங்கம் மற்றும் freak fitness அண்டு ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் 2024 போட்டி நடைபெற்றது. இப்போட்டியானது Freak fitness மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனத் தலைவர் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர்.சியாம் பிரசாத் முகர்ஜி நிறுவன செயலாளர் பேராசிரியர் கனகசபாபதி,பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் உத்தமராமசாமி கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் இப்போட்டி 16, 17,18,19 வயது பிரிவாக நடைபெற்றது.இதில் ஒற்றை வால், இரட்டை வால்,சுழற்வீச்சு என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

மேலும் போட்டியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா,இலங்கை போன்ற நாடுகளில் இருந்து கலந்து கொண்டனர். மற்றும் சென்னை, திருப்பூர்,ஈரோடு,சேலம், மதுரை,திருநெல்வேலி,தேனி, திருச்செங்கோடு,கன்னியாகுமரி,திருவாரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட பள்ளி,மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் உலக சிலம்ப விளையாட்டு சங்கத்தின் மாநில நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.சுதாகரன், கோவை மாவட்ட உலக சிலம்ப விளையாட்டு சங்க தலைவர் சங்கரநாராயணன், ஆசன்கள் குமார், மாரிமுத்து,பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க