• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பற்கள் குறித்த சிறப்பு கண்காட்சி

May 14, 2024 தண்டோரா குழு

பற்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக, கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பற்கள் குறித்த கண்காட்சி இன்று துவங்கியது.

மருத்துவமனையில் உள்ள 9 சிறப்பு பல் சிகிச்சை துறை இதில் பங்கேற்று, பல விழிப்புணர்வு கொண்ட தகவல்களை போஸ்டர்களாகவும், மாதிரிகளாகவும் காட்சி படுத்தி இருந்தனர். இந்த கண்காட்சி இன்று (14.5.2024) முதல் வரும் வெள்ளி (17.5.2024) வரை மொத்தம் 4 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர்,கல்லூரியின் முதல்வர் டாக்டர் தீபானந்தன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ்.ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன், எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி சி.வி.ராம்குமார் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள்,மாணவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

இந்த கண்காட்சியை மக்கள் இலவசமாக காணலாம். இந்த கண்காட்சியின் மூலம் பற்கள் தொடர்பான குறைபாடுகள் பற்றியும், சிகிச்சை முறைகள் பற்றியுமான இலவச ஆலோசனைகளை இங்குள்ள மருத்துவர்கள் விளக்கி கூறுவார்கள்.பல் குறைபாடுகள் குறித்து மருத்துவ ஆலோசனைகளையும், அதற்கான சிகிச்சைகள் குறித்து வழிகாட்டுதல்களும் இந்த கண்காட்சி மூலம் மக்களுக்கு இலவசமாக கிடைக்கும் என்பதால் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மக்கள் இதை பயன்படுத்தி கொள்ளுமாறு மருத்துவமனை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க