• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐஐஐடி சங்கம் கோவை கிளை சார்பில் கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம்

April 26, 2024 தண்டோரா குழு

கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம் இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி) சங்கம் கோவை கிளை சார்பில் வரையப்பட்டது.

கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில் மிக பிரம்மாண்டமாக 300 அடி அகல சுவர் ஓவியம் ஒன்று இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி) சங்கம் சார்பில் வரையப்பட்டது. இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி,) சங்கத்தினர் நாட்டின் தேசிய வடிவமைப்பு கொள்கை உருவாக்குவதிலும், பல்வேறு நிகழ்ச்சிகள், திட்டங்களை நடத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

நாடு முழுவதும் 24 கிளைகளையும், மையங்களையும் கொண்டு 10,000-க்கும் அதிகமான உறுப்பினர்களை இச்சங்கம் கொண்டுள்ளது. இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள், தொழில் ரீதியான வடிவமைப்பாளர்கள், இது தொடர்பான வணிகம் ஃ நிறுவனங்கள், மாணவர்களை கொண்ட அமைப்பாக இதுதிகழ்கிறது. இவ்வருடம் ஐஐஐடியின் பொன்விழாவை முன்னிட்டு, மாபெரும் வடிவமைப்புகள் குறித்த 7 பாகங்களை காலாண்டு தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளது. இது நிப்பான் பெயிண்ட் இன்டியா நிறுவனத்தின் கூட்டு ஆதரவுடன் உள் அலங்கார பொன் விழா தொடராக இது வெளியாகும்.

இதன் முதல் பாகம், “நாம் அமைத்த அலங்கார வெளிகள்” என்ற தலைப்பில், சென்னையில் அண்மையில் வெளியானது. இந்தியாவின் புகழ்வாய்ந்த கலை இயக்குனரான பத்மஸ்ரீ தோட்டாதரணி இதை துவக்கி வைத்தார். ஐஐஐடி-யின் இரண்டாவது பாகம், ‘The Yards We Scale’ என்ற தலைப்பில், இன்று (ஏப்ரல் 26-ம் தேதி) கோவையில் வெளியாகின்றது. இதில் பல்வேறு சிறப்பு வாய்ந்த கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், கட்டுமான நிபுணர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளிருந்தும் பங்கேற்கின்றனர்.

டில்லியை சேர்ந்த ராஜ் ரேவல், பெங்களுரு சஞ்சய் மோஹே, பிலிப்பைன்ஸ்சை சேர்ந்த லிலியா டி ஜீசஸ், சூரத்தை சேர்ந்த தினேஷ் சுதார் மற்றும் இவர்களுடன் தோட்டாதரணி உட்பட பலர் பங்களித்துள்ளனர். இந்த பதிப்பானது, மனித வாழ்வு மற்றும் கலாச்சார முற்றங்கள் போன்றவைகளையும் விவரிக்கும்.

மக்களை ஊக்கப்படுத்த ஐஐஐடி, இந்த கலைப்பணியில் கோவையை சேர்ந்த ஐஐஐடி டிசைன் வல்லுனர்கள், நிப்பான் பெயிண்ட் குழுவினர், வடிவமைப்பு துறை மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் பாரதி பார்க் மகளிர் சங்கத்தினர் இணைந்து இதை செயல்படுத்தியுள்ளனர். ஐஐஐடியின் வரலாலற்றில் இந்த நிகழ்ச்சியானது உலக அளவில் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.

இதன் துவக்க விழாவிற்கு, ஐஐஐடியின் அகில இந்திய தலைவர் சரோஷ் வாடியா தலைமை வகித்தார். இந்த இன்ஸ்கேப் திட்டத்தின் ஆசிரியர் ஜபீன் எல் ஜக்கரியாஸ், இந்த திட்டங்களை அறிமுகம் செய்தார். டெக்ஸ்வேலி நிர்வாக இயக்குனர் பி.ராஜசேகர் கௌரவ விருந்தினராக பங்கேற்றார். நிப்பான் பெயிண்ட் முதுநிலை இயக்குனர் எஸ். எம். பாலாஜி சிறப்புரையாற்றினார்.

ஐஐஐடி கோவை தலைவர் ஸ்ரீனி ஆஷிஷ் ரெய்ச்சுரா, அனைவரையும் வரவேற்று பேசினார். ஐஐஐடியின் தேசிய தலைவர் (தேர்வு) ஜிக்னிஷ் மோடி, தேசிய செயலளர் சாமினி சங்கர், பாரதி பார்க் மகளிர் சங்கத்தின் தலைவி நீத்து பராஷார் மற்றும் ஐஐஐடியின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் நாடு முழுவதிலும் இருந்து இதில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க