• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஏப் 7 ம் தேதி ஆட்டிசம் கோ புளு விழிப்புணர்வு வாக்கத்தான் !

March 21, 2024 தண்டோரா குழு

கோவையில் ஆட்டிசம் கோ புளு என்ற விழிப்புணர்வு வாக்கத்தான் வருகின்ற ஏப்ரல் 7,2024 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு ரேஸ் கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கி,ரேஸ் கோர்ஸ் ரவுண்டானாவை சுற்றி 3 கிமீ விழிப்புணர்வு நடைப்பயணம் மீண்டும் பிஷப் அப்பாசாமி கல்லூரி முன்பே முடிவடைகிறது.

இந்த வாக்கத்தான் நிகழ்ச்சிக்கான டீசர்ட் அறிமுக விழா கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள தேர்டு ஐ ஆட்டிசம் சென்டரில் நடைபெற்றது.தேர்டு ஐ சென்டர் ஆப் ஆட்டிசம் என்ற நிறுவனம் ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஆதரவை வழங்குவதற்காக சரண்யா ரெங்கராஜ் என்பவரால் கடந்த 2013 ம் ஆண்டு தொடங்கப்பட்டு,கிணத்துக்கடவு, கோயம்புத்தூர் மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.

இந்த சிறப்புப் பள்ளிகள் மற்றும் சிகிச்சை மையங்களில் வாயிலாக ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது.

தேர்டு ஐ மையத்தின் இயக்குனர் சரண்யா ரெங்கராஜ் கூறுகையில்,

ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பல ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிலரங்குகளை நடத்தி வருகிறோம்.அந்த வகையில் கடந்த வருடம் கோ ப்ளூ வாக்கத்தான் நிகழ்ச்சியை நடத்தினோம்.அதன் இரண்டாவது பதிப்பாக இந்த வருடமும் வாக்காத்தான் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடைப்பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும்,இதில் பங்கேற்க பள்ளிகள், கல்லூரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த முயற்சியானது ஆட்டிசம் கொண்ட நபர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க