• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 28 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா

March 15, 2024 தண்டோரா குழு

கோவை க.க சாவடி பகுதியில் அமைத்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் வெள்ளிக்கிழமை இன்று காலை 28ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு உடற்கல்வி இயக்குனர் ஜெயப்பிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார். ஸ்ரீ நாராயணர் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் சஜீஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். 2023-24 ஆம் கல்வி ஆண்டு அறிக்கையை கல்லூரி முதல்வர் கல்பனா சமர்ப்பித்தார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரேபிட் ஆக்சன் ஃபோர்ஸ் துணை கமான்டேன்ட், ஒலிம்பியன் மற்றும் தியான் விருது பெற்ற ஜின்சி பிலிம் கலந்துகொண்டு நிகழ்ச்சி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, அவர் பேசுகையில்,

மாணவர்கள் பெரிய கனவுகளை காணவும் அவர்களின் கனவுகள் மட்டும் இலக்குகளை அடைய கடினமாக உழைக்கவும் வலியுறுத்தினார்.மேலும் மாணவர்கள் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க ஊக்குவிக்கவேண்டும். விளையாட்டு திறமையால் அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம், என் சி சி மற்றும் என் எஸ் எஸ் ஆகிய பிரிவுகளின் சிறந்து விளங்கிய மாணவ மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இறுதியாக ஆங்கிலத்துறை தலைவர் மஞ்சு நன்றியுரை ஆற்றினார்.

மேலும் படிக்க