• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் பாலி டெக்டே 2024

March 14, 2024 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியின்
பாலி டெக்டே 2024 இன்று மதியம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாணவர் சங்க செயலாளர் எஸ்.கார்த்திக் அனைவரையும் வரவேற்றார்.

பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் B.கிரிராஜ்,பாலி டெக்டே 2024-ன் அறிக்கையை வழங்கினார்.கோயம்புத்தூர்
காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்
இயக்குனர் ரமேஷ் கல்யாண் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில்,

தொழில்துறை வளர்ச்சிக்கான பொறியியலின் நோக்கம் குறித்து பேசினார். செயற்கை நுண்ணறிவு உருவாக்கம் போன்ற சமீபத்திய போக்குகளைப் பற்றி புதுப்பித்த நிலையில் இருக்குமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளும், கடினமாக உழைப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்குமாறு கூறினார்.

மாணவர் சங்கத்தின் தலைமை ஆலோசகர் வி.மோகன் சிவக்குமார் மாணவர் விருதுகளை அறிவித்தார்.மொத்தம் 14 மாணவர்கள், அப்பேரல் டெக்னாலஜி, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங், டிசைனிங் மற்றும் டிராஃப்டிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், ஃபவுண்டரி டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,மெக்கானிக்கல் இன்ஜினியரிங்,மெகாட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் மற்றும் டெக்ஸ்டைல் டெக்னாலஜி. ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களைப் பெற்றனர்.

பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் ஒட்டுமொத்த சிறந்த மாணவர் விருது, சிறந்த என்.சி.சி கேடட் விருது, சிறந்த என்.எஸ்.எஸ் தன்னார்வலர் விருது, சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் பெண்களுக்கான விருது மற்றும் ஆறு உதவித்தொகை விருதுகளை தலைமை விருந்தினர் வழங்கினார்.நிகழ்ச்சியின் முடிவில், மாணவர் சங்க செயலாளர் எப்.பெர்னிஸ் ரெனிட்டா நன்றியுரை கூறினார்.

மேலும் படிக்க