• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

R2R அணியை நொறுக்கி BestofThree ‘ கோப்பையை கைப்பற்றிய RD பாய்ஸ் அணி !

March 2, 2024 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள AD7s arena உள் விளையாட்டு அரங்கில் ‘ Best of Three’ கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இன்று சனிக்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது. இப்போட்டியில் R2R அணியும் RD பாய்ஸ் அணியும் மூன்று தொடரில் விளையாடியது.

முதல் போட்டியில் R2R அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் நடைபெற்ற 2 போட்டிகளிலும் RD பாய்ஸ் அணி R2R அணியை நொறுக்கி கோப்பையை தட்டி சென்றது.

இறுதி போட்டியில் RD பாய்ஸ் அணி 12 ஓவர்களில் 150 ரன்கள் குவித்தது. ஜப்பார் மற்றும் நிஜாம் ஆகியோர் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டாவது களம் இறங்கிய R2R அணி 80 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு R2R அணியின் கேப்டன் நவாஸ் கோப்பையை வழங்கினார்.

மேலும் படிக்க