• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கரும்புகடையில் முதல் முறையாக புத்தகத் திருவிழா

March 2, 2024 தண்டோரா குழு

கோவை கரும்புகடையில் முதல் முறையாக புத்தகத் திருவிழா மார்ச் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கரும்புகடை ஹிதாயா கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் துவக்க விழாவில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்து மாநில தலைவர் மௌலவி முஹம்மத் ஹனிபா மன்பயீ மற்றும் மாநில துணைத்தலைவர் ஜலாலுதீன்,மாநில அமைப்பு செயலாளர் ஜலாலுதீன்,இஸ்லாமிக் எஜுகேஷனல் டிரஸ்ட் பொதுச்செயலாளர் சபீர் அஹமத், மனிதவள மேம்பாட்டு துறைச் செயலாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக கண்காட்சியினை துவக்கி வைத்தனர். புத்தகத்தின் முதல் விற்பனையை கரும்புகடை சம்சுல் இஸ்லாம் பள்ளியின் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

கோவை கரும்புகடையில் ஜமாத் இஸ்லாமி ஹிந்து சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் குர்ஆன்,குர்ஆன் மொழிபெயர்ப்பு,நபி மொழிகள், இறைத்தூதர் வரலாறு,சிறுவர்களுக்கான குர்ஆன் வரலாறுகள்,அறிவு சார்ந்த புத்தகங்கள்,பெண்களுக்கான உரிமைகள், கடமைகள்,வழிகாட்டுதல் புத்தகம் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஒரு லட்சத்திற்கும் மேலான புத்தகங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை புத்தகங்கள் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வை,கோவை மாவட்ட தலைவர் உமர் பாரூக், சபீர் அலி, பீர்முகமது, அப்துல் ஹக்கீம் ஆகியோர் புத்தக விழாவினை ஒருங்கிணைத்தினர்.

மேலும் படிக்க