• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“இந்திய ராணுவப்புலனாய்வுப் பணியாளர்களிடையே நிபுணத்துவ மன அழுத்தம்” என்ற புத்தகம் வெளியீடு!

February 26, 2024 தண்டோரா குழு

கோயம்புத்தூர் நீலம்பூரில் உள்ள கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நூலின் ஆசிரியர் டாக்டர்.பா சரவணன், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் வணிக நிர்வாகத் துறைத் துறைத் தலைவர்,கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, துணை ஆசிரியர் டாக்டர் என்.பஞ்சநாதம்., முனைவர், முன்னாள் துணைவேந்தர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, சென்னை, டாக்டர் எம்.ஜெயகுமாரன்., முனைவர்.,மேலாண்மை பள்ளி, கலசலிங்கம் பல்கலை, கிருஷ்ணன் கோயில் எழுதிய “இந்திய ராணுவப் புலனாய்வுப் பணியாளர்களிடையே நிபுணத்துவ மன அழுத்தம்” என்ற புத்தகம் ப்ரிமேக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பெங்களூர் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன்பின், ஆசிரியர் முனைவர் பா.சரவணன் வரவேற்று நூல் அறிமுகம் செய்தார். விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் R.கற்பகம் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்வின் தலைமை விருந்தினராக லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.எல்.நரசிம்மன்,
பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், விஎஸ்எம், பிஎச்.டி (ஓய்வு), ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நூலினை லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.எல்.நரசிம்மன், பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், விஎஸ்எம், பிஎச்.டி (ஓய்வு), கர்னல் ரமணி ஹரிஹரன், விஎஸ்எம் (ஓய்வு), கர்னல் டி.எம். சண்முகம் (ஓய்வு), டாக்டர் கே.வி. ராமநாதன்., பிஎச்.டி, துணைத் தலைவர், பிரிமேக்ஸ் அறக்கட்டளை, பெங்களூர் வெளியிட்டனர்.

மேலும், கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின் சி.கஜலட்சுமி சரவணன் நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க