• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் பிரபலமான மினிஸோ கோவையில் தனது மூன்றாவது கிளையை துவங்கியது !

February 25, 2024 தண்டோரா குழு

அழகு கலை சாதனங்கள்,வீட்டு உபயோக பொருட்கள்,பெர்ஃப்யூம்ஸ்,பரிசு பொருட்கள் என அனைத்து விதமான பொருட்களையும் விற்பனை செய்யும் மினிஸோ இந்தியா உட்பட 80 நாடுகள் என முழுவதும் 4200 கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது.

இந்நிலையில் கோவையில் தனது மூன்றாவது கிளையாக மினிஸோ லூலூ மால் அமைந்துள்ள லஷ்மி மில் வளாகத்தில் துவங்கியுள்ளது.இதன் நிர்வாக இயக்குனர்கள் ஷ்ரேயன்ஸ்,அக்‌ஷய்,பரத் ஆகியோர் தலைமையில் துவக்க விழா நடைபெற்றது.

இதுகுறித்து அதன் நிர்வாக இயக்குனர்கள் அக்க்ஷை, பரத், ஷ்ரயான்ஸ் முதன்மை நிர்வாக அதிகாரி கீட்ஸ் ஆகியோர் கூறியதாவது:-

மினிசோ என்பது 80க்கும் மேற்பட்ட நாடுகளில் 4200க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற வாழ்க்கை முறை பிராண்டாகும். மலிவு விலையில் உயர் தரமான வீட்டு மற்றும் அன்றாட பொருட்களை வழங்குகிறோம். MINISO ஒரு பழமொழி உள்ளது, “ஒரு சிறந்த வாழ்க்கைக்கு விலையுடன் எந்த தொடர்பும் இல்லை.”

மினிசோ இந்தியாவில் 260க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ளது.கோவை புரோசோன் மாலில் உள்ள எங்கள் கடை 2018 இல் திறக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் ஸ்டோர் ஆகும்.25 பிப்ரவரி 2024 அன்று திறக்கப்பட்ட லக்ஷ்மி மில்ஸில் உள்ள கடை இந்தியாவின் மிகப்பெரிய மினிசோ அவுட்லெட்டாகும்.இங்கு எங்கள் தயாரிப்புகளான அழகுசாதனப் பொருட்கள்
வாசனை திரவியங்கள் சரும பராமரிப்பு பொம்மைகள் மற்றும் காகிதம் முதலிய எழுது பொருள்கள் அன்றாட வாழ்க்கைக்கான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இங்கு ரூ 60 ரூபாயில் இருந்து 1800 ரூபாய் வரைஉள்ள பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் படிக்க