• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் ‘கிரடைஷ் 2024’ கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார விழா

February 15, 2024 தண்டோரா குழு

கோவை க.க சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் ‘கிரடைஷ் 2024’ என்ற பெயரில் தேசிய அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார விழா கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கல்பனா வரவேற்றார்.விழாவிற்கு ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சாத்து குட்டி தலைமை வகித்து பேசினார். அப்போது,கலாச்சாரம் மற்றும் போட்டியுடன் கூடிய கல்வி மாணவர்களுக்கு மதிப்பை அளிக்கிறது என தெரிவித்தார்.

ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பங்கஜ் குமார் விழாவை சிறப்பித்தார்.பிஹேண்ட்வுட்ஸ் மீடியாவின் மூத்த தொகுப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான சரவணன் ராம்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது,மாணவர்கள் தங்கள் கனவுகளை வாழ்க்கையில் நினைவாக்க தைரியமும், தன்னம்பிக்கையும் நிலைத்தன்மையும் கொண்டடிருக்க வேண்டும் என தெரிவித்தார்.தொடர்ந்து தமிழ் சினிமாவின் பின்னணி பாடகர் பெல்லி ராஜ் தமிழ் மற்றும் மலையாளத்தில் பாடல்களை மாணவர்களிடையே பாடி மகிழ்வித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது நிகழ்ச்சியில்,அடாப்டியூன்,முக ஓவியம்,படத்தொகுப்பு, ரங்கோலி, தனிப்பாடல்,தனிநபர் நடனம், குழு நடனம், பேஷன் ஷோ, Mr.கிரடைஷ், Ms.கிரடைஷ் மற்றும் இலக்கிய போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டிகளில் மாணவ மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளை பெற்றனர்.இதில் கோவை மற்றும் பாலக்காடு பகுதியில் உள்ள 25 மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் மஞ்சு ஒருங்கிணைத்தார்.

மேலும் படிக்க