• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி டெண்டர் திறக்கலையா -புகார் தர போவதாக ஒப்பந்ததாரர் சங்கம் அறிவிப்பு

February 13, 2024 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் செயலாளரும் கேசிபி இன்பரா நிறுவன நிர்வாக இயக்குனருமான சந்திரபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களில் சிலர் டெண்டரில் பங்கேற்றும் தங்களது டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படாமல் பெண்டிங் வைத்து இருப்பதாக புகார் வந்துள்ளது.

எப்போது எந்த தேதியில் வெளியான டெண்டர்,ரோடு வடிகால் என எந்த வகையான பணி,டெண்டர் விண்ணப்பம் எப்போது சமர்ப்பிக்கப்பட்டது என்ற விவரங்களை சரியாக ஒப்பந்ததாரர் நல சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.

ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அனுப்பி வைக்கலாம்.
இந்த புகார்கள் அனைத்தும் சங்கத்தின் சார்பாக மாநகராட்சி கமிஷனர், நகராட்சி நிர்வாக கமிஷனர்,நகராட்சி செயலாளர்
உள்ளிட்டோருக்கு உடனடியாக அனுப்பி வைத்து தீர்வு காணப்படும்.

ஒப்பந்ததாரர் நல சங்கம் ஒப்பந்ததாரருக்கு தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருக்கிறது.நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக இதற்காக புகார் தர வேண்டிய அவசியம் இல்லை . சங்கமே இதை முன் நின்று புகாராக பதிவு செய்து தீர்வு பெற்று தரும். எப்போதும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சங்கத்தை அணுகி உதவி பெறலாம்.

தேவையான உதவிகளை செய்ய சங்கம் தயாராக இருக்கிறது என கேசிபி இன்பரா நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க