• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவேரி குரூப் ஆஃப் கம்பெனிஸ் சார்பில் ‘அண்டர் கிரவுண்ட் வாட்டர் டேங்க்’ இரண்டு மாடல்கள் அறிமுகம்

February 1, 2024 தண்டோரா குழு

கோவையில் ‘ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச எக்ஸ்போ & உச்சிமாநாடு 2024’ கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் வியாழக்கிழமை இன்று காலை தொடங்கியது.பிப்ரவரி 1 முதல் 3ம் தேதி வரை இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.கொடிசியாவில் B மற்றும் C அரங்குகளில் நடைபெறும் எக்ஸ்போவில் மொத்தம் 450 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதில் பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக,கோவையில் முன்னணி நிறுவனமான காவேரி குரூப் ஆப் கம்பெனி புதிய படைப்பாக அண்டர் கிரவுண்ட் வாட்டர் டேங்க் இரண்டு மாடல்களை இன்று அறிமுகம் செய்துள்ளது. இதனை கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜதுரை மற்றும் கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் காவேரியின் புதிய அண்டர் கிரவுண்ட் வாட்டர் டேங்கை அறிமுகப்படுத்தி வைத்தனர்.

இதுகுறித்து காவேரி குரூப் ஆப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் வினோத்சிங் ரத்தோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கோவையில் முதல் முறையாக அண்டர் கிரவுண்ட் வாட்டர் டேங்க் 7 வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.காவேரி பொருட்கள் அனைத்தும் தரமானதாக வழங்கப்பட்டு வருகிறது.தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு வகை அண்டர் கிரவுண்ட் வாட்டர் டேங்க் ட்ரோன் மூலம் 55 அடி உயரத்திலிருந்து கீழே விழ செய்து சோதிக்கப்பட்டுள்ளது.இதன் மூடி இரண்டு கிலோ வரை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அண்டர் கிரவுண்ட் வாட்டர் டேங்க் தண்ணீர் தொட்டிக்கு பதிலாக உடனடியாக பொருத்த முடியும். தற்போது ஆயிரம் லிட்டர் முதல் ஐந்தாயிரம் லிட்டர் வரை இந்த அண்டர் கிரவுண்ட் வாட்டர் டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் படிக்க