• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குழந்தைகளுக்கான வன்கொடுமை மற்றும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான்

January 28, 2024 தண்டோரா குழு

கோவையில் குழந்தைகளுக்கான வன்கொடுமை மற்றும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. தமிழக முன்னாள் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்து மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றார்.

ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டி மற்றும் சி.எம்.எஸ். வித்யா மந்திர் பள்ளி சார்பில் குழந்தைகளுக்கான வன்கொடுமை மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் கோவை,கணபதி அருகே மணிகாரம் பாளையத்தில் நடைபெற்றது. இதில் குழந்தைகள் பெரியவர்கள் மாற்று திறனாளிகள் என 2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை தமிழக முன்னாள் டி ஜி பி சைலேந்திர பாபு கொடியசைத்து தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கபட்டது.

சி.எம்.எஸ் நிர்வாகத்தின் தலைவர் கே.கே. ராமச்சந்திரன்,பொதுச் செயலாளர் கே. ராஜகோபாலன்,சி.எம்.எஸ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் துணைத் தலைவர் டாக்டர் ஸ்ரீகாந்த் கண்ணன், செயலாளர் டி.ஏ.வேணுகோபால் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் எம்.குணசேகரன்,முதல்வர் டாக்டர் ஜி.டேனியல், கோவை தடகள சங்க செயலாளர் ஸ்ரீ. சீனிவாசன் இந்த மினி மாரத்தான் ஓட்டத்தை ஒருங்கிணைத்தனர்.

மேலும் படிக்க