கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாப்பிய்யா ஜாமத்தின் கீழ் செயல்படும் மன்ப உல் உலூம் கல்வி நிறுவனங்கள் சார்பில் நாட்டின் 75வது குடியரசு தின விழா
மன்ப உல் உலூம் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாப்பிய்யா ஜாமத்தின் தலைவர் ஹாஜி ஐனாயத்துல்லா சிறப்பு விருந்தினராக கலந்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில், மன்ப உல் உலூம் மேல்நிலை பள்ளியின் தாளாளர் நிஸார் அகமது வரவேற்புரை ஆற்றினார்.மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மன்பஉல் உலூம் தொடக்கப்பள்ளி தாளாளர் கலீல் ரஹ்மான் நன்றியுரை ஆற்றினார்.இந்த நிகழ்வில் ஜாமத்தின் செயலாளர்,முத்தவல்லி தாளாளர்கள், நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது