• Download mobile app
18 Dec 2025, ThursdayEdition - 3599
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே பி ஆர் பொறியியல் கல்லூரியில் தென் மண்டலம் அளவிலான பெண்கள் வுஷு போட்டிகள் !

January 17, 2024 தண்டோரா குழு

தென் மண்டலம் அளவிலான பெண்கள் வுஷு போட்டிகள் கோவை கே பி ஆர் பொறியியல் கல்லூரியில் ஜனவரி 18 முதல் 21 வரை நடைபெற உள்ளது.

மத்திய அரசின் விளையாட்டு துறையின் முன்னெடுப்பான கேலோ இந்தியா திட்டம் விளையாட்டு துறையில் பெண் வீராங்கனைகள் தங்களது திறமைகளை தேசிய அளவில் வெளிப்படுத்தும் வாய்ப்பாக நடத்தப்படும் போட்டிகளின் ஒரு பகுதியாக பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்ட இப் போட்டிகள் ஓவ்வொரு ஆண்டும் மண்டல அளவிலும் இறுதிப்போட்டிகள் தேசிய அளவிலும் நடைபெற்று வருகின்றன. வடக்கு மண்டல போட்டி உத்ரகாண்டிலும், கிழக்கு மண்டல போட்டி அஸ்ஸாமிலும், மேற்கு மண்டல போட்டி கோவா விலும் மற்றும் தெற்கு மண்டல போட்டி தமிழ்நாட்டிலும் நடைபெறுகிறது.

அதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான தென் மண்டல அளவிலான பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாட்டில் கோவை கேபிஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. ஜனவரி 18 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியை “ஆஸ்மிதா” அமைப்புடன் தமிழ்நாடு வுஷு சொசியேஷன் மற்றும் கே பி ஆர் பொறியியல் கல்லூரி ஒருங்கிணைந்து நடத்துகிறது.

இதில் மொத்தம் 9 மாநிலங்கள் இருந்து சுமார் 600 வீராங்கனைகள்
சப் ஜூனியர் ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர். மண்டல அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் தேசிய அளவில் நடைபெறும் கேலோ இந்தியா பெண்கள் வுஷு போட்டியில் பங்கேற்பார்கள்.

வெற்றி பெற்றவர்களுக்க சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பண முடிப்புகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க