சாலை பாதுகாப்பு தலைக்கவசத்தை வலியுறுத்தியும் மற்றும் போதையில்லா கோவையை உருவாக்கிடவும் 500″க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கைகளில் பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணித் திட்டம் உடன் கோயம்புத்தூர் விழாக்குழு இணைந்து இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது.இச்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியில் –
மாணவ மாணவிகள் சாலை விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தல்,தலைக்கவசம் அணிதல், சீட்பெல்ட் அணிதல், மித வேகத்தில் பயணித்தல், ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிடுதல் மற்றும் போதை இல்லா கோவையை உருவாக்கிட விழிப்புணர்வு பதாகைகளோடு பேரணியில் பங்கேற்றனர்.
மேலும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி
நிறுவனங்களின் கல்லூரி முதல்வர்கள் – நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.C.V. ராம்குமார் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள்,ADSP சிற்றரசன,
அதிகாரிகள், இப்பேரணியில் காவல்துறை உயர் போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்ட 500″க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லஷ்மிநாராயணசுவாமி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணிக்குத் தலைமையேற்று அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னலில் இருந்து துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு