• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று கோவை மண்டல மாணாக்கர்கள் சாதனை!

January 5, 2024 தண்டோரா குழு

ஸ்ரீராம் இலக்கியக் கழகம்,தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டியில், மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவர் சி. அகில் இடைநிலைப் பிரிவில் இரண்டாம் பரிசையும்,கோவையில் இயங்கி வரும் பி.எஸ்.ஜி. மருந்தியல் கல்லூரி மாணவி த. சுரேகா கல்லூரிப் பிரிவில் மூன்றாம் பரிசையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஸ்ரீராம் இலக்கியக் கழகம்,‘இடைநிலைப் பிரிவு (6-8 ஆம் வகுப்பு)’,‘மேல்நிலைப் பிரிவு (9-12 வகுப்பு)’,‘கல்லூரிப் பிரிவு’ என மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியை மாநில அளவில் நடத்தியது. இதில் மொத்தம் 4816 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு மற்றும் கோவை ஆகிய 12 மண்டலங்களில் கால் இறுதி மற்றும் அரை இறுதிச் சுற்றுகள் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்றன. இவற்றிற்கான இறுதிச் சுற்று அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 36 போட்டியாளர்கள் (ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் என 12 மண்டலங்களைச் சேர்ந்த வெற்றியாளர்கள்) இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.

இதில் மாநில அளவில் வெற்றி பெற்றோரின் விவரம் பின்வருமாறு:

இடைநிலைப் பிரிவு:

•முதல் பரிசு:பெ.த.சங்கமேஸ்வரன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்ககிரி (சேலம் மையம்)

•இரண்டாம் பரிசு:சி.அகில்,சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி, மேட்டுப்பாளையம். (கோயம்புத்தூர் மையம்)

•மூன்றாம் பரிசு: பா. வர்ஷா, ஷெம்ஃபோர்ட் பள்ளி, சிதம்பரம் (புதுச்சேரி மையம்)

மேல்நிலைப் பிரிவு:

•முதல் பரிசு:ச.கெள.பாவேஷ்பிரசன்னா, அரசினர் மேல்நிலைப்பள்ளி, பேரளம், நன்னிலம்.(திருவாரூர் மையம்)

•இரண்டாம் பரிசு:செ.ஷிவானி, டி.ஏ.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் மேற்கு,சென்னை (தாம்பரம் மையம்)

•மூன்றாம் பரிசு: மொ. கா. காவ்யபிரியா, ஸ்ரீ சுந்தரேஸ்வரர் வித்யாசாலா பதின்ம மேல்நிலைப் பள்ளி, மேலூர் (மதுரை மையம்)

கல்லூரிப் பிரிவு:

•முதல் பரிசு:மு.மணிவாசகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை (மதுரை மையம்)

•இரண்டாம் பரிசு:அ.பாலபிரியதர்ஷினி டாக்டர் எம்.ஜி.ஆர்.அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம் (புதுச்சேரி மையம்)

•மூன்றாம் பரிசு: த.சுரேகா பி.எஸ்.ஜி. மருந்தியல் கல்லூரி, பீளமேடு, கோவை (கோயம்புத்தூர் மையம்)

முதல் பரிசு வென்றோருக்கு தலா ரூ. 10,000 ரொக்கமும், இரண்டாம் பரிசை தட்டிச் சென்றோருக்கு தலா ரூ. 7,500 ரொக்கமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 5,000 ரொக்கமும் மற்றும் அனைவருக்கும் கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க