• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மழையிலும் தடையின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம்

January 21, 2017 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் ஒருமித்த குரலில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று ஐந்தாவது நாளாக சனிக்கிழமை கோஷமிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வந்தாலும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் எந்தவித தடையுமின்றி நடந்து வருகிறது.

மதுரை, கோவை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால், இதனைப் போராட்ட களத்தில் இருந்தவர்கள் சட்டை செய்யவில்லை. கொட்டும் மழையிலும் தரையில் அமர்ந்து தங்கள் உறுதியைக் காண்பித்தனர். இதுவரை கொட்டும் பனி மற்றும் வெயிலில் நடந்த போராட்டம், இன்று கொட்டும் மழையிலும் நடந்து வருகிறது.

போராட்டத்தின் சிறப்பு என்னவென்றால் பாலின வேறுபாடின்றி, சாதி, மத பாகுபாடின்றி எல்லா மக்களும் ஒரே களத்தில் போராடி வருகின்றனர். உணவு வழங்குவது, இடத்தை சுத்தமாக வைத்திருப்பது என தங்களின் பணிகளைத் தாங்களே செய்து கொண்டு முழு அர்ப்பணிப்புடன் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். மழையினால் ஏற்படும் குப்பைகளை அங்குள்ளவர்களே அகற்றி தங்களின் இடத்தைச் சுத்தமாக வைத்துள்ளனர்.

மேலும் படிக்க