• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

December 18, 2023 தண்டோரா குழு

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் முதல்கட்டமாக 133.21 கோடி மதிப்பில் அமையபட்ட உள்ள செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல் உட்பட பல்வேறு துறைகளின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்,முதியோர் உதவித்தொகை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை சார்பில் தையல் இயந்திரம் வழங்குதல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் சலவை பெட்டி வழங்குதல், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம், பட்டு வளர்ச்சி துறை, தாட்கோ, சத்துணவு, சாலை விபத்து நிவாரணம் உட்பட பல்வேறு துறைகளில் கீழ் 7 ஆயிரத்து 945 பயனாளிகளிக்கு 110.51 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம்,கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன், மேயர் கல்பனா ஆனந்த்குமார்,கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மக்களுடன் முதல்வர் திட்ட அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வருக்கு, கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குறிச்சி பகுதியில் தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவரின் சிலை மாதிரி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மேலும் இந்நிகழ்ச்சியில் செம்மொழி பூங்காவின் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் படிக்க