 December 17, 2023
December 17, 2023  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                இந்திய தொழில் வர்த்தக சபை கோவையின் சார்பில் ஜி.கே.சுந்தரம் விருது வழங்கும் விழா அவிநாசி சாலையில் அமைந்துள்ள சேம்பேர் டவர்ஸில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை, சன்மார் குழுமத்தின் துணைத் தலைவர் என்.குமார் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸின் நிர்வாக பங்குதாரர் ராஜா ரவிச்சந்திரன், சால்சர் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெடின் இணை நிர்வாக இயக்குனர் ராஜேஷ்குமார் மற்றும் சங்கர் அண்ட் அசோசியேட்ஸின் மூத்த பங்குதாரர் ரமணி சங்கர் ஆகியோருக்கு ஜி.கே.சுந்தரம் விருதுகள் வழங்கப்பட்டது.