• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஃபீனிக்ஸ் ஃபெஸ்ட் எனும் உணவு மற்றும் அலங்கார பொருட்கள் கண்காட்சி

December 17, 2023 தண்டோரா குழு

ஆதரவற்ற பெண் குழந்தைகள் கல்வி உதவிக்கு நிதி திரட்டும் வகையில் கோவையில் இளைஞர்கள் ஒருங்கிணைத்த ஃபீனிக்ஸ் ஃபெஸ்ட் எனும் உணவு மற்றும் அலங்கார பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

கோவையில் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் கல்வி உதவிக்கு நிதி திரட்டும் வகையில்,ரெட் ஃபீனிக்ஸ் அறக்கட்டளை மற்றும் ஹோப் அமைப்பினர் ஆகியோர் சார்பாக ,ஒரு நாள் பொழுது போக்கு உணவு திருவிழா மற்றும் விற்பனை கண்காட்சி கோவை அவினாசி சாலையில் உள்ள,அலெக்ஸாண்டர் குதிரையேற்ற பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.

ஃபீனிக்ஸ் ஃபெஸ்ட் என்ற தலைப்பில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், கோவை மாநகர வடக்கு காவல்துறை துணை ஆணையர் சந்தீஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார். ரெட் ஃபீனிக்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர்கள் புவனா சதீஷ், வினோனா சதீஷ் மற்றும் ஹோப் அமைப்பின் தலைவர்கள் நமன் மோமயா,பார்த் சுகாதியா ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள்,உணவு வகைகள் என நாற்பதுக்கும் மேற்பட்டஅரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொழுது போக்கு அம்சங்களாக, காஸ்ப்ளே, அனிம், இ ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜூம்பா போன்ற பல்வேறு வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குறிப்பாக இங்கு வரும் பொதுமக்களை மகிழ்விப்பதற்காக பிரபல சின்னத்திரை பிரபலங்கள்,யூ டியூப்பர்ஸ் என பலர் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர்களில் குக் வித் கோமாளி புகழ், எருமா சானியின் ஹரிஜா, ஹுசைன் அகமது,வி.ஜே.கல்யாணி திவ்யானந்த் மற்றும் ஃபயாஸ் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே புதிய அனுபவத்தை தரும் வகையில் இளம் தலைமுறையினர் முதன் முறையாக ஒருங்கிணைத்துள்ள இந்த ஒரு நாள் திருவிழாவில்,ஆர்வமுடன் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க