• Download mobile app
20 Jan 2026, TuesdayEdition - 3632
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேருந்து விபத்தில் 7 சிறுவர்கள் பலி

January 21, 2017 தண்டோரா குழு

இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் சிறுவர்களை அழைத்துச் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியதால் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து இத்தாலி நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு நேர்ந்திருக்கிறது.

இது குறித்து அந்நாட்டின் காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரோம் நாட்டின் உள்ள வெரோனா நகரைச் சுற்றிப் பார்க்க ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த சிறுவர்கள் சுற்றுலா மேற்கொண்டனர். அவர்களை அழைத்துச் சென்ற பேருந்து காட்டுப்பாட்டை இழந்து வடக்கு இத்தாலி பகுதியில் உள்ள சாலையில் இருந்த கோபுரம் போன்ற சுவரின் மீது மோதியது. அதில் 7 சிறுவர்கள் அங்கேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் காயமடைந்தனர்.

தகவல் அறிந்த வெரோனா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் ஒருவர் என்று கருதப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க