• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 10 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா மற்றும் நூல்வெளியிடுதல் விழா

December 16, 2023

உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 10 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா 16.12.2023 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியின் என்.ஜி.பி கலையரங்கில் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்வு இனிதே துவங்கியது.டாக்டர் என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி வரவேற்புரை வழங்கினார்.உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி இவ்விழாவிற்குத் தலைமையேற்றார்.தலைமைதேற்றதுடன் இவ்விழாவில் சிறப்புரை வழங்கினார்.

அவர் தமது உரையில்,

தமிழ்மொழியின் மீது தாம் கொண்ட பற்றினைப் பற்றிக்கூறினார் . அமெரிக்காவில் அவர் வசித்தபொழுது அங்கிருந்த தமது நண்பர்களுடன் தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பு பற்றி எப்பொழுதும் உரையாடுவதாகக் கூறினார்.தமிழ்மொழியின் சிறப்பைப் பாதுகாக்க தன்னால் இயன்றதை நிச்சயமாகச் செய்ய வேண்டுமென்று தான் உறுதி பூண்டதாகத் தமது உரையில் கூறினார்.

மேலும் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றி வந்திருக்கின்ற விருது பெறுகின்ற படைப்பாளர்களுக்கு விருது வழங்குவதில் மிகவும் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.விருது பெறுபவர்கள் பற்றிய அறிமுகவுரையை பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் வழங்கினார்.உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி” சிற்பியின் பாரதி கைதி எண் 253″ என்ற ஆங்கில மொழியாக்கக் கவிதை நூலை வெளியிட்டார்.

இவ்விழாவில் முனைவர் ப.மருதநாயகம் தமிழ் மொழியின் சிறப்புக் குறித்தும் ” சிற்பியின் பாரதி கைதி எண் 253 ” என்ற நூலின் சிறப்புப் பற்றியும் உரையாற்றினார். பாரதியின் வரிகள் வைரம் போன்றிருக்கும் என்றார்.அதில் சிற்பியின் எழுத்துக்கள் வைரத்தின் இடையே மணிகளைக் கோர்த்தால் எப்படிச் சிறப்பாக இருக்குமோ அவ்வாறு அந்த நூல் சிறப்புடன் திகழ்கிறது என்று கூறினார். உ.வே.சா.தமிழறிஞர் விருது முனைவர் பா.ரா.சுப்ரமணியன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பெரியசாமித்தூரன் படைப்பாளர் விருது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த் தொண்டர் விருது முனைவர் ஆ.ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது . சிறப்பு விருதுகள் முனைவர் சு.சண்முகசுந்தரம் , முனைவர் ஆ.மணி,எழுத்தாளர் க.அம்சப்ரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.முனைவர் பா.ரா.சுப்ரமணியம் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்,முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி விருது பெற்று மகிழ்வுரை வழங்கினார்கள்.

எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் மதியுரைஞர் பெ.இரா.முத்துசாமி நன்றியுரை வழங்கினார்.நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

மேலும் படிக்க