• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புதிய அலுவலகத்தை ரெஸ்பான்சிவ் நிறுவனம் தொடங்கியுள்ளது

December 15, 2023 தண்டோரா குழு

திறம் வாய்ந்த மேலாண்மை சேவைகளை வழங்கும் தொழில்நுட்ப (SRM) மென்பொருளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ரெஸ்பான்சிவின் (Responsive),தனது புதிய அலுவலகத்தை கோவையில் தொடங்கியுள்ளது.

திறம் வாய்ந்த மேலாண்மை சேவைகளை வழங்கும் தொழில்நுட்பம் நிர்வாகத்தில் முன்னணியில் இருக்கும் ரெஸ்பான்சிவ் விரைவான வளர்ச்சியின் காரணமாக இந்தியாவில் அமைந்துள்ள புதிய இடம் தற்போது உள்ளதைவிட இரண்டு மடங்கு ஊழியர்களை பணியாற்ற ஏற்றதாக இருக்கும்.ஸ்ட்ராட்டஜிக் ரெஸ்பான்ஸ் மெனேஜிமென்ட் வலுவான வளர்ச்சியை பெற்றுள்ளது, 2022 இல் மதிப்பிடப்பட்ட மதிப்பு $3.34B மற்றும் 2028 க்குள் $22.74B ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கால் கேட்கும் கேள்விகள் மற்றும் தகவல்களுக்கு பதிலளிக்கும் திறம் வாய்ந்த மேலாண்மை சேவைகளை வழங்கும் தொழில்நுட்பம் (Strategic Response Management – SRM) என்பது ஒரு நிறுவனத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய அம்சம் என இன்றைய காலத்தில் கருதப்படும் ஒன்றாக உள்ளது என ஆரகன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வணிகம் சார்ந்த கேள்விகள் மற்றும் தகவல் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க நிறுவனங்கள் பலரும் தற்போது இந்த SRM சேவையை வேகமாக தங்கள் நிறுவனங்களின் பின்பற்ற துவங்கி வருகின்றனர்.

ரெஸ்பான்சிவ் நிறுவனம் உருவாக்கியுள்ள SRM சேவைகள் வழங்கும் தளம் தானியங்கி வழிமுறையில் (Automation) மிகசிறப்பாக செயல்பட முடியும் என்பதால் இது தொழில் நிறுவனங்களின் மதிப்பை கூட்டிடும் வகையில் அமைந்துள்ளது.அண்மையில் இதன் சேவைகள் பல புகழ்மிக்க அங்கீகாரங்களையும் இந்த துறையில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெஸ்பான்சிவ் முதலில் அதன் தயாரிப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை இந்தியாவில் கோவையில் நிறுவியது.அதன் பிறகு, நிறுவனம் தனது தயாரிப்புக்குழுவின் பெரும்பகுதியை இந்தியாவில் உருவாக்கியுள்ளது, அதே நேரத்தில் விற்பனை, சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர்களுக்கு தொழில்முறை சேவைகள், நிதி மற்றும் மற்ற குழு உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டுள்ளது. ரெஸ்பான்சிவ்வின் விரைவான வளர்ச்சியில் ஒருங்கிணைந்த பங்கை வகிக்கும் மிகவும் முக்கியான சந்தையாக கோயம்புத்தூர் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கோவையை பூர்விகமாக கொண்ட ரெஸ்பான்சிவ் தலைமை நிர்வாக அதிகாரி கணேஷ் சங்கர் கூறுகையில்,

“கோயம்புத்தூரில் எங்களின் வளர்ச்சியானது, ரெஸ்பான்சிவ் பரிணாம வளர்ச்சியின் பிரதிபலிப்பாகவும், உலகளாவிய நிறுவனங்கள் எவ்வாறு தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் பரிமாறிக் கொள்கின்றன என்பதை மாற்றியமைப்பதற்கான எங்களின் லட்சியத்தை நோக்கிய முன்னேற்றம்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில் “எங்கள் உள்ளூர் குழு உறுப்பினர்கள் விரைவாக மற்றும் புதுமைகளைத் தொடர்வதால் அவர்களுக்கான இடத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் கூடுதல் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு ஆதரவாக அதிக இடத்தைப்பெறுகிறோம்.”என்றார்.

மேலும் படிக்க