• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் புதிய ரத்த வங்கிதிறப்பு

December 9, 2023 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் கோவை மாவட்ட கிளைசார்பில் புதிய ரத்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா இன்று (9-ந்தேதி)நடைபெற்றது.

விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார்சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி டாக்டர் ஜஸ்டிக் எம் ஜெயச்சந்திரன்
ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய ரத்த வங்கியைதிறந்து வைத்தனர்.இந்த விழாவிற்கு கோவை ரெட் கிராஸ் சொசைட்டியின் சேர் பேர்ஷன்நந்தினி ரங்கசாமி முன்னிலை வைத்தார்.

விழாவில் ரூட்ஸ் கே.ராமசாமி,மோகன் சங்கர்.எஸ் ஜே பாலகிருஷ்ணன் அன்னபூர்ணா குரூப் சீனிவாசன் ராமசாமி எஸ் வி பாலசுப்ரமணியம் சாய் கிருஷ்ணன் அரோமா விஜயலட்சுமி அஸ்வின் குமார் ஆர் ரமேஷ் சரஸ்வதி நடராஜன் நிர்மலா ராஜசபாபதி டாக்டர் ராஜா பாஸ்கரகணேஷ் வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சென்னை ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன், கோவை ரெட் கிராஸ் சொசைட்டியின் ஷேர் பெர்சன்நந்தினி ரங்கசாமிமோகன் சங்கர் ஆகியோர் கூறும்போது கூறியதாவது:-

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் கோவை மாவட்ட கிளை கவுண்டம்பாளையத்தில் நவீன வசதிகளோடு புதிய ரத்த வங்கியை தொடங்கியுள்ளது. இங்கு அதிக நவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த ரத்த வங்கி ரத்ததானம் கொடுப்பவர்களுக்கும்தானம் பெறுபவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் விதமாகவும் பராமரித்தால் மற்றும் குணப்படுத்துதலோடு உதவுவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த ரத்த வங்கி 24 மணி நேரமும் செயல்படும் மேலும் மருத்துவமனைகள் மற்றும் தனி நபர்களுக்கு சேவையை வழங்குகிறது அரசு மருத்துவமனையில்இருந்து ரத்தம் தேவை என்று கோரிக்கை விடப்பட்டால் இலவசமாக ரத்தம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

மேலும் படிக்க