• Download mobile app
05 Dec 2025, FridayEdition - 3586
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திமுக சார்பில் உண்ணாவிரதம்

January 21, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை தொடங்கியது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

உண்ணாவிரதம் தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கை:

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். இது இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

இதைத்தான் திமுக தொடர்ந்து கூறி போராடியும் வருகிறது. இந்த அவசரச் சட்டத்தை முன் கூட்டியே மாநில அரசோ அல்லது மத்திய அரசோ கொண்டு வந்திருந்தால் ஐல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையன்றே சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டிருக்கும். என்றாலும் இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் அதிமுக அரசு உடனடியாக செய்ய வேண்டும்.

அதே சமயத்தில் இனி எந்த ஆண்டிலும் ஜல்லிக்கட்டு தடைப்படாத வகையில் காளைகளை மத்திய அரசும் தன் அறிவிக்கையில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

தமிழ்க் கலாசாரம் மற்றும் பண்பாடு காக்கப் போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மீண்டும் ஒரு முறை திமுக சார்பில் நன்றி தெரிவித்து, வாடி வாசலில் காளை மாடுகள் அவிழ்த்து விடப்படும் வரை தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடத்தியது திமுக. இதற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தை திமுகவினர் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க