• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

250 நோயாளிகளுக்கு 33000 டயாலிசிஸ் செய்ய உதவிய ஆர்சில் நிறுவனம்

December 6, 2023 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னோடியான சொத்து மறுசீரமைப்பு நிறுவனமான ஆர்சில்,2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோவையில் உள்ள ஜெயின் மெடிக்கல் & டயாலிசிஸ் மையத்திற்கு டயாலிசிஸ் உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது.

மேலும் குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனைக்கு இரண்டு மானியங்களையும் வழங்கியுள்ளது.இந்த முன்முயற்சிகள் ஆர்சிலின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) சுகாதார முன்முயற்சிகளின் குறிப்பிடத்தக்க பகுதியாகும்.

இந்த முன்முயற்சி குறித்து ஆர்சில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி., பல்லவ் மொஹபத்ரா கூறுகையில்,

கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு மற்றும் சுகாதார அணுகலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மேம்பாடுகளுக்கான நமது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், சமூக நலனுக்கு பங்களிப்பதில் ஆர்சில் பெருமை கொள்வதாக கூறினார். எதிர்காலத்தை வளர்ப்பதே எங்கள் நோக்கம் எனவும் சமூகப் பொறுப்புணர்வுடன் வழிநடத்தப்பட்டு, மனிதகுலத்தில் ஒவ்வொரு முதலீடும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோமெனவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவரும் இணைந்து, நிதி வெற்றியை சிரமமின்றி சமூக முன்னேற்றத்துடன்,பொறுப்பான தலைமைத்துவத்தின் சாரத்தை உள்ளடக்கிய ஒரு உலகத்தை உருவாக்குகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.இந்த நிறுவனம் கடைசி 10 ஆண்டுகளாக,இந்த மையம் 250 நோயாளிகளுக்கு 33000 டயாலிசிஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க