• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிரபல ஹோட்டல் உணவில் கிடந்த கரப்பான் பூச்சி – வாடிக்கையாளர் அதிர்ச்சி

November 27, 2023 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் பகுதியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமாக இயங்கக்கூடிய தனியார் நிறுவனமான டைகர் எண்டர்பிரைஸ்.மாத கடைசி ஞாயிற்றுக் கிழமை நிறுவனத்தில் பணிபுரியவர்களுக்கு உணவு வாங்குவது வழக்கம்.

நேற்று கார்த்திகை தீபம் என்பதால் காந்திபுரம் இருக்கக்கூடிய அடையாறு ஆனந்த பவன் உணவகத்தில் பார்சல் வாங்கி சென்றுள்ளனர். உணவைப் பிரித்து உண்ணும் போது அதில் கரப்பான் பூச்சி ஒன்று கீரை கூட்டில் இருப்பதைக் கண்டு பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து அடையார் ஆனந்த பவன் உணவகத்திற்கு சென்ற நிறுவன ஊழியர் கிரிஸ்டபர் இதுகுறித்து கேட்ட பொழுது முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் அழைத்து தகவல் தெரிவித்தும் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் அலட்சியமாகவும் பதில் அளித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

2157 ரூபாய்க்கு உணவை வாங்கி சென்ற நிலையில் கரப்பான் பூச்சி உடன் இருந்த உணவை சாப்பிட்ட பெண்கள் இருவரும் வாந்தி எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க