• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கரீபியன் கல்லறை தீவு ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி – கோவையில் புதிய ரெஸ்ட்ரோ பார் துவக்கம்

November 7, 2023 தண்டோரா குழு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ட்ரினிட்டி நட்சத்திர விடுதியில் ‘பைரேட்ஸ்’ மாதிரி வடிவத்தில் கப்பலுக்குள் அமர்ந்து உணவு சாப்பிடுவது போன்ற உட்கட்டமைப்பில் புதிய ரெஸ்ட்ரோ பார் துவங்கப்பட்டுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் ட்ரினிட்டி நட்சத்திர விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு ‘பைரேட்ஸ்’ மாதிரியில் ரெஸ்ட்ரோ பார் துவங்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திலான உணவு வகைகள் மற்றும் மதுபான வகைகளுடன் இன்று ரெஸ்ட்ரோ பார் துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு விடுதி வளாகத்தில் நடைபெற்றது.

அப்போது விடுதியின் நிர்வாக இயக்குனர் ஜோசப் ஸ்டீபன் கூறியதாவது:

உலக தரத்தில் கோவையில் ரெஸ்ட்ரோ பார் தொடங்க வேண்டும் என்பது பல நாள் கனவாக இருந்தது.தற்போது நிறைவேறி உள்ளது. ‘பைரேட்ஸ் கான்செப்ட்’ அடிப்படையில் இந்த ரெஸ்ட்ரோ பார் தொடங்கப்பட்டுள்ளது.

ஆர்கிடெக் ஹேரிசன் இதனை அருமையாக வடிமைத்துக் கொடுத்துள்ளார். கப்பலுக்குள் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை கொடுப்பதற்காக பல்வேறு கட்டமைப்புகளை மேற்கொண்டுள்ளார்.இந்த ரெஸ்ட்ரோ பாரில் சர்வதேச மதுமாபன வகைகள், காண்டினெண்டல் உணவு வகைகள் கிடைக்கும்.

மெனு கார்டில் இருக்கும் அத்தனை உணவுகளும் எப்போதும் இங்கு தயாராக இருக்கும். சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் தனித்தனியே தயாரிக்கப்படுகிறது.

திருச்சூரில் இருந்து தினமும் பீஃப், ஃபோர்க் இறைச்சிகளும், தூத்துக்குடியில் இருந்து மீன் வகைகளும் வாங்குகிறோம்.தினமும் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த ரெஸ்ட்ரோ பார் செயல்படும். குடும்பத்தினருடன் வந்து அமர்ந்து உணவு சாப்பிட ஏறவும், 130 பேர் ஒரே நேரத்தில் அமரும் வகையிலும், 3 ஆயிரம் சதுரடியில் ரெஸ்ட்ரோ பாரை மொத்தம் ரூ.2.5 கோடி செலவில் உருவாக்கியுள்ளோம்.

ரஷ்யா, துபாய், ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் 16 ஆண்டுகளாக சமையல் கலைஞராக பணியாற்றி வந்த நிர்மல்குமார் இந்த ரெஸ்ட்ரோ பாரின் தலைமை சமையல் கலைஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க